இலங்கை மின்சாரசபை தலைவரின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை!
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பேர்டிணான்டோவின் பதவி விலகலை, உரிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நடைமுறை மின்சார நெருக்கடிக்கு மத்தியில், நேற்று முன்தினம், மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டிணான்டோ தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அவரின் பதவி விலகல் கடிதம், ஜனாதிபதி்க்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே அமரிக்காவின் நியூ போர்ட்ரீஸ் எனர்ஜி, நிறுவனத்துடன், உடன்படிக்கையை செய்து கொண்டமை தொடர்பில் பேர்டிணான்டோ மீது, மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் பேர்டிணான்டோ, தமது பதவி விலகல் கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் பதவி விலகுவதாக தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri