பல இடங்களில் திட்டமிட்ட மின்சார தடை? பொலிஸில் முறைப்பாடு
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, 29ம் திகதி, டிரான்ஸ்மிஷன் லைனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது ஒரு நாசகார செயலா என்பதை நிரூபிப்பதற்காக நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் போதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பலர் இந்த செயலிழப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்களால் இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக சிலர் தன்னிடம் முறைப்பாடு தெரிவிப்பதாகவும், மற்றவர்கள் இது சாதாரண செயலிழப்பு இல்லை என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri