மற்ற நாடுகளின் கோரிக்கையால் ஈரானுடன் போர்நிறுத்தம்: ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள எச்சரிக்கை
சீனப் பயணத்தை முடித்து விட்டு அமெரிக்கா திரும்பும் வழியில் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தம் குறித்து அதிரடி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் இன்னும் சில 'சுத்தப்படுத்தும் பணிகளை' செய்ய வேண்டி இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆயுதப் படைகளை அமெரிக்கா ஏற்கனவே கணிசமாக அழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், கடந்த ஒரு மாத காலமாக அங்கு போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டதால், விடுபட்டுப்போன பணிகளை முடிக்க தாங்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.
போர் நிறுத்தம்
இந்த போர்நிறுத்த உடன்படிக்கைக்கு தான் தனிப்பட்ட முறையில் ஆதரவாக இருக்கவில்லை என்றும், மற்ற நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கியே இதற்குச் சம்மதித்ததாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்குச் செய்யும் ஒரு உதவியாகவே இந்த போர்நிறுத்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri