மீண்டும் போர் நிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி விளக்கம்
இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையிலான இரண்டாம் கட்ட போர்நிறுத்த பேச்சுவார்தையானது தற்போது நடைபெற்று வருவதாக இஸ்ரேலின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்பதற்காக காசாவில் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
பாலஸ்தீனியர்கள் விடுதலை
இதில் 90ற்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது.
ஐ.நா கவலை
இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு அமைச்சகதினால் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா அதனை தடுப்பதினால் போடுவதால் நிறைவேற முடியாத நிலை காணப்படுவதாக ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.
தனது மரணம் பற்றி தலைவர் பிரபாகரன் கூறிய அந்த விடயம்! மெய்ப்பாதுகாவலர் கூறும் அதிர்ச்சித் தகவல் (video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |