மேல் மாகாணத்தில் உச்சம் தொட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
மேல் மாகாணத்தில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை ஆழ ஊடுருவியுள்ளது.
அங்கு நேற்று மாத்திரம் 1,393 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 434 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 591 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 368 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களின் 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவன்திடிய மற்றும் மாம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri