திடீரென தாக்குதலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டி சாரதி! வைரலாகும் சிசிடிவி காணொளி (Video)
பேருவளை பிரதேசத்தில் சிசிடிவில் பதிவாகிய தாக்குதல் சம்பவம் தொடர்பில் 29 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்த சந்தர்ப்பத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியுள்ளார்.
இந்த நிலையில் மோட்டார்சைக்கிளில் இருந்தவர் இது தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதியிடம் வினவியுள்ளார்.
இதனையடுத்து ஆவேசமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார்சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டியின் பாகத்தை எட்டி உதைத்துள்ளார்.
அத்துடன் முச்சக்கரவண்டியிலிருந்து பொல்லொன்றை எடுத்து மோட்டார்சைக்கிளையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவமானது சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் இது தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
