யாழ். அராலியில் விற்பனை நிலையமொன்றில் கண்காணிப்பு கெமரா திருட்டு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் உள்ள கண்காணிப்பு கெமரா ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மது போதையில் வந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கெமராவை முறித்து சேதப்படுத்தியதுடன் அருகில் இருந்த பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கெமராவை திருடிச் சென்றுள்ளார்.
மது போதை
இந்நிலையில் தமது வர்த்தக ஸ்தாபனத்துக்கு வந்த உரிமையாளர்கள், தமது வர்த்தக ஸ்தாபனத்தில் இருந்து கெமரா சேதப்படுத்தப்பட்டு இருந்தததையும், களவாடப்பட்டு இருந்ததையும் அவதானித்தனர்.
கடையில் உள்ள பொருட்களை திருடுவதற்கு முயற்சித்தவேளை வீதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் குறித்த சந்தேகநபர் தப்பித்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
