அரசியல் அமைப்பு பேரவையில் நிலவும் பதவி வெற்றிடத்தை நிரப்புமாறு கோரிக்கை
அரசியல் அமைப்பு பேரவையில் நிலவி வரும் பதவி வெற்றிடத்தை உடன் நிரப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அரசியல் அமைப்புப் பேரவையில் நிலவும் வெற்றிடத்திற்கு உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒருவர் இந்தப் பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட வேண்டும்.எனினும் இந்த வெற்றிடம் இதுவரையில் நிரப்பப்படவில்லை.
அண்மையில் எழுந்துள்ள சில சர்ச்சைகளுக்கு அரசியல் அமைப்பு பேரவையின் இந்த பதவி வெற்றிடம் ஏதுவாக அமைந்துள்ளது என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே இந்த பதவி வெற்றிடம் கூடிய சீக்கரம் நிரப்பப்பட வேண்டியது அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இணக்கப்பாடின்மை காரணமாக இந்த பதவி வெற்றிடம் நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |