கிரிக்கட்டில் கடும் தண்டனை- அமுல்படுத்தியுள்ள கிரிக்கட் சம்மேளனம்.
சர்வதேச 20க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் பந்து வீசுவதில் அணிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதை தடுக்கும் முகமாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னர் பந்து வீச்சு தாமதத்துக்காக அபராதங்களே விதிக்கப்பட்டு வந்தன.
புதிய விதியின்படி, சர்வதேச 20க்கு 20 கிரிக்கட் போட்டிகளில் பந்து வீசும் அணி ஒன்று 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களையும் வீசி முடிக்கவேண்டும்.
எனினும் 90 நிமிடங்களில் அணி ஒன்று, 20 ஓவர்கள் பந்துவீசி முடிக்காவிட்டால், எஞ்சிய ஓவர்களின் போது 30 யார்ட் வட்டத்துக்கு (30 yard circle)வெளியே நின்று களத்தடுப்பில் ஈடுபடும் ஒரு வீரர் 30 யார்ட் வட்டத்துக்குள் (30 yard circle) அழைக்கப்படவேண்டும் என்பதே புதிய விதியாகும்.
(வழமையாக, 6 வது ஓவர்களுக்கு பின்னர், 30 யார்ட் வட்டத்துக்குள்( 30 yard circle) வெளியே ஐந்து வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபடுவர்)
அத்துடன் அணி ஒன்று ஒரு இன்னிங்ஸில் 2.30 நிமிடங்களை ஓய்வுக்காக எடுத்துக்கொள்ளமுடியும் என்ற விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த புதிய விதிகள், 2022 ஜனவரி 16ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் அயர்லாந்து ஆடவர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் 2022 ஜனவரி 18ஆம் திகதியன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இது நடைமுறைக்கு வருகிறது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
