கால அவகாசத்தை நீடிக்குக! இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை
கடன்கள் மற்றும் குத்தகைகள் மீதான மீட்பு நடவடிக்கைகளின் கால அவகாசத்தை 2022 மார்ச் 31 வரை நீடிக்குமாறு வங்கிகளிடம், மத்திய வங்கி கோரியுள்ளது.
இது தொடர்பான ஒரு சுற்றறிக்கையில், குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களை கட்டாயமாக மீட்டெடுப்பது உட்பட, அனைத்து வகையான மீட்பு நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு மத்திய வங்கி கேட்டுள்ளது.
கடன் மீட்பு கால அவகாசம் 2021 டிசம்பர் 31இல் முடிவடையும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
சுற்றுலாத் துறையில் கடன் பெற்றவர்கள், ஏற்கனவே 2022, ஜூன் 30ஆம் திகதி வரை தங்கள் கடன் செலுத்தல் கால நீடிப்பைப் பெற்றுள்ளனர்.
மத்திய வங்கி மதிப்பீட்டின்படி, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் நடைமுறையில் உள்ள கடன் அறவீடுகளின் தொகை 780 பில்லியன் ரூபாகள் ஆகும்.



