நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
இலங்கை நிறுவனங்கள் அமெரிக்க டொலரை விட பணவீக்க நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தமது செலவுகள் மற்றும் சம்பள விடயங்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பட்டய நிதி ஆய்வாளர்கள் சங்கம் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நிறுவனங்கள் அமெரிக்க டொலரை விட பணவீக்க நிலைமைகளை அடிப்படையாக கொண்டு தமது செலவுகள் மற்றும் சம்பளத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
நிறுவனங்கள் அமெரிக்க டொலரை அடிப்படை ஊதியம் மற்றும் செலவுகளுக்கு பயன்படுத்தாமல் பணவீக்க நிலைமைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |