இலங்கைக்கு IMF வழங்கிய நிதி பயன்பாடு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த வருடம் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியை அரச நிதி நடவடிக்கைளுக்காக பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ப்ளும்பர்க் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய விரிவான நிதியானது நிலுவை நெருக்கடியைத் தணிக்க மட்டுமே பயன்படுத்த கூடிய வகையில் இருந்த போதிலும் இம்முறை நிலைமை மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இம்முறை நிதியை அரச நிதிக்காக பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உரிய நிதியைப் பெற்ற பிறகு, அன்னியச் செலாவணியை வாங்கி, அதே தொகையை செலவினங்களுக்காக நாணய ஆணையத்திடம் கொடுக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் சந்தையில் பணம் சேகரிப்பதற்குப் பதிலாக, சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதியை வரவு செலவுத் திட்டத்திற்கு பயன்படுத்த முடிந்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
