டெங்கு தொற்று தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட மற்றும் குறுகிய காலத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 18,749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் சிக்குன்குனியா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அறிவுறுத்தல்
அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயம் மிக்க மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நுளம்பு பெருகும் இடங்களைக் கண்டறிந்து அதனை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்பு கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உடல் முழுவதையும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri