தீவிர எச்சரிக்கை நிலையில் வெப்பநிலை..! அவதானமாக இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்
இன்று (09) நண்பகல் 12.13 மணிக்கு பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 09) முதல் நடைமுறைக்கு வரும் இந்த எச்சரிக்கையின்படி, 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதால் வெப்பத்தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும்.

எனவே நிலவும் உயர் வெப்பநிலை காரணமாக, மக்கள் நாள் முழுவதும் நீரோற்றத்துடன் இருக்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும், அடிக்கடி ஓய்வெடுக்கவும், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பைக் குறைக்கவும், அத்துடன் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 21 மணி நேரம் முன்
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam