கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு ஏற்பட காரணம் என்ன?
தடுப்பூசி செலுத்தலில் ஏற்படும் முறைகேடுகளுக்கு பல்வேறு தரப்பினரின் செல்வாக்குமிக்க கோரிக்கைகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
எனினும் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் என்றும் இதன்காரணமாக சுகாதார அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலர் வெவ்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளைப் பெறுவதில் தமக்கு முன்னுரிமை வழங்குமாறு சில அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளை கோரிய பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான சூழ்நிலைகளில் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை பட்டியலின் படி அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய இயலாது என்று அவர் வலியுறுத்தினார்.
இது போன்ற தேவையற்ற கோரிக்கைகளை விடுப்பதும் பின்னா் சுகாதார அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
