போக்குவரத்துக்கு இடையூறாகும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விசனம்
கல்முனை மாநகர சபைக்குற்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டாக்காலி மாடுகள் இரவு வேளைகளில் அதிகளவாக நடமாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கட்டாக்காலி கால் நடைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நகர வீதி ,பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சாய்ந்தமருது,மருதமுனை,பெரிய நீலாவணை, உள்ளிட்ட வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு சிரமம் ஏற்படுகின்றன.
எனினும் இது தொடர்பாக பொதுமக்களினால் பல்வேறு முறைப்பாடுகள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
இவ்வாறு கட்டாக்காலி மாடுகளை பிடிப்பதற்கு கல்முனை மாநகர சபை பொலிஸாருடன் இணைந்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
மேலும் கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையினால் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பலதடவைகள் அறிவுறுத்தியும் கவனத்தில் கொள்ளாமையினால் நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் நடவடிகடகை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டு உரிமையாளர்கள் ஒரு மாட்டிற்கு தண்டப்பணம் மற்றும் பராமரிப்புச் செலவு பெறப்பட்டிருந்ததுடன் சில உரிமையாளர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தொடர்ச்சியான விபத்துக்கள்
மேலும் குறிப்பாக கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதி,கல்முனை -மட்டக்களப்பு பிரதான வீதி, கல்முனையிலிருந்து சவளக்கடை செல்லும் முக்கிய பிரதான வீதிகளில் பகல்,இரவு பாராது கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதினாலும்,வீதிகளில் கூட்டமாக கிடப்பதினாலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றது. எனினும் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 8 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
