கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வு
நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.
உயர்த்தப்பட்டுள்ள வரி
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கசீனோ சூதாட்ட நிலையங்களை நடத்திச் செல்வதற்காக இதுவரை காலமும் 200 மில்லியன் ரூபா வரி அறவீடு செய்யப்பட்டது.
இந்த தொகையானது 500 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
சூதாட்ட நிலையங்களின் வருடாந்த வரியும் 600,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
மதுபானம் மற்றும் சிகரெட்டுக்கான வரி
மேலும் ஒரு போத்தல் மதுபானத்திற்கான வரி 75 வீதமாக உயர்த்தப்படும் எனவும், சிகரெட் வரி 85 வீதமாக உயர்த்தப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
