வரி செலுத்தாமல் ஏமாற்றிய கசினோ மைய உரிமையாளர்கள்
கசினோ மைய உரிமையாளர்கள் இருவர் தங்கள் வரி நிலுவையை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி செலுத்தாத கசினோ மைய உரிமையாளர்கள்
சுமார் ஆயிரத்து முன்னூறு மில்லியன் ரூபா வரி செலுத்தாமல் இருந்த இரண்டு கசினோ மைய உரிமையாளர்கள் தங்கள் வரி நிலுவையை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
நாட்டின் முதல்தர பணக்காரராக கருதப்படும் கசினோ மைய உரிமையாளர் ஒருவர் 576 மில்லியன் ரூபா வரி மிகுதியையும், மற்றொருவர் 760 மில்லியன் ரூபா வரி மிகுதியையும், மிக நீண்ட காலமாக செலுத்தாமல் இருந்துள்ளனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
எனினும் தற்போதைய நிலையில் சூதாட்டம் தொடர்பான சட்டங்களை அரசாங்கம் திருத்தி, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதனையடுத்து 576 மில்லியன் வரி மிகுதியை கொண்டுள்ள கசினோ மைய உரிமையாளர் அதனை ஒரே தடவையில் செலுத்தவும், அடுத்தவர் தனது வரி மிகுதி 760 மில்லியன் ரூபாவில் பாதியை முதலில் செலுத்திவிட்டு, மிகுதியை தவணை முறையில் செலுத்தவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
