எரிபொருள் முறைகேட்டை தடுக்கும் பொலிஸாருக்கு பணப்பரிசு- செய்திகளின் தொகுப்பு
சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய 100 லீட்டர் வரையான பெட்ரோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீட்டர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், 500 முதல் 1000 லீட்டர் வரையான எரிபொருளைக் கைப்பற்றுவோருக்கு 03 இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,





மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் 42 நிமிடங்கள் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
