குரங்கு பிடிப்போருக்கு ரொக்கப்பணம்: நாடாளுமன்றில் முன்மொழிவு
விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இன்று அரசாங்கத்திடம் முன்மொழிந்தார்.
கணக்கெடுப்பை காட்டிலும் இது சிறந்த வழி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலங்குகளால் ஏற்படும் சேதத்தின் பெறுமதியை கருத்தில் கொள்ளும்போது, இதற்காக சிறிது பணத்தைச் செலவிடுவது பெரிய பிரச்சினை அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிக செலவுகள்
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில நிபுணர்கள் 2015 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்திற்கு குரங்குகளை கருத்தடை செய்யவோ அல்லது டோக் குரங்குகளை பொருத்தமான இடத்தில் அடைத்து வைக்கவோ முன்மொழிந்தனர்.

எனினும், அதிக செலவுகள் காரணமாக அந்த திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தால் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வைக் காண முடிந்தால், அதிக செலவுகள் என்ற பிரச்சினை தொடராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri