ஜனாதிபதி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பொய் வழக்கு தாக்கல் : மயிலத்தமடு பண்ணையாளர்கள் ஆதங்கம்
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனான கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஏறாவூர் பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு இன்று (20.03.2024) வருகை தந்த மயிலத்தமடு பண்ணையாளர் சங்கத்தினர், தங்கள் மீதான வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வழக்கு தாக்கல்
மேலும், கடந்த வருடம் மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 37 பேரில் 5 பேர் அன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாது, ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் அவர்கள் மீது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள் என கூறி ஏறாவூர் பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக குறித்த பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கெள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துறை முன்னிலையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
