இந்தியா - கர்நாடக முன்னாள் முதலைமைச்சரின் தகாத நடவடிக்கை தொடர்பில் வழக்கு பதிவு
17 வயதான சிறுமி ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதியன்று குறித்த சிறுமியும் அவரது தாயும் கல்விக்கான உதவி கோரி முன்னாள் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றபோது எடியூரப்பா சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாவின் தலைவர் எடியூரப்பா,ஒரு அறையில் சிறுமியை தாகத முறைக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றச்சாட்டு மறுப்பு
அத்துடன், அதனை வெளியில் கூறவேண்டாம் என்று கூறி, பணத்தையும் வழங்கியதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நான்கு தடவைகள் முதலமைச்சராக இருந்த 81 வயதான எடியூரப்பா, தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். உதவி செய்ய சென்று தாம் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சட்டரீதியாக இதனை அனுகப்போவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
