கெஹலிய உள்ளிட்ட 12பேருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நிரந்தர அமர்வின் முன்னிலையில் நேற்றைய தினம் (26) குறித்த குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப் பத்திரிகை, கெஹலிய உள்ளிட்டவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகள்
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமான தன்மை கொண்டவையாக இருப்பதன் காரணமாக மூன்று நீதிபதிகள் கொண்ட நிரந்தர விசேட அமர்வொன்றின் முன்பாக அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சட்ட மா அதிபர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, பிரதம நீதியரசர் உத்தரவின் பேரில் இந்த விசேட நிரந்த அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஹ்யூமன் இம்யுனோகுளோபுலின் மற்றும் ரீடொக்சி மெப் ஆகிய மருந்துகளுக்குப் பதிலாக சுகாதார அமைச்சுக்கு வேறு மருந்துகள் அடங்கிய 6195 குப்பிகளை வழங்கி, அரசாங்கத்துக்கு 1444 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிரான வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப விசாரணைகள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
