யாழில் தெருவோர வியாபாரிகள் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
யாழ்ப்பாணம் (Jaffna) திருநெல்வேலியில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தெருவோர வியாபாரிகள் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நேற்றையதினம் (10.06.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை மற்றும் தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இயங்கியமை மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடுமையான எச்சரிக்கை
வழக்குகளை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் மூவரிற்கும் மொத்தமாக 35,000/= தண்டம் அறவிட்டதுடன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
