பியர் தயாரிப்பிற்கு அரிசி - சீனியை பயன்படுத்த தடை விதிக்குமாறு கோரி வழக்கு
பியர் தயாரிப்பிற்கான பிரதான மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சர்க்கரையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான சில்லறை விற்பனையாளர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம், கலால் திணைக்கள அதிகாரிகள், இலங்கை தரநிர்ணய நிறுவனம், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கலால் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ், பியர் என்பது தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த மதுபானம்' என வரையறுக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதுள்ள பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பியர் தயாரிப்பில் அரிசி மற்றும் சர்க்கரையை முக்கிய பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர்.
இது கலால் சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச நிதியுதவி மற்றும் பெருமளவிலான மானியங்களுடன் உற்பத்தி செய்யப்படும் அரிசி, பியர் தயாரிப்பு போன்ற வணிகத் தொழில்களுக்குத் திருப்பிவிடப்படுவதால், அது தேசியப் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அவர்கள் வாதிட்டுள்ளனர்.
இத்தகைய நடைமுறைகளால், அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவை அடைவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என மனுதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மதுபான உற்பத்தித் தரங்களைக் கண்காணிப்பதற்கான தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, இலங்கை கட்டளைகள் நிறுவனம் தனது ஒழுங்குமுறை கட்டமைப்பைப் புதுப்பிக்கவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, பியர் தயாரிப்பில் அரிசி மற்றும் சர்க்கரையை முதன்மைப் பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு, கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனுமதி வழங்குவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam