விமல் வீரவன்சவின் வழக்கு விசாரணைக்கு வருகிறது
கொழும்பு, பௌத்தலோக மாவத்தையில் பிரதான வீதிகளை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது, அரச தரப்பு சாட்சி முன்னிலையாகாதநிலையில் பொலிஸார் விசாரணைக்கு மற்றும் ஒரு திகதியை கோரினர்.
இதனையடுத்து வழக்கு இந்த வழக்கை ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
6 பேர் பிரதிவாதிகள்
2016 பெப்ரவரி 6 ஆம் திகதியன்று , மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஸெய்த் ராத் அல் ஹுசைனின் வருகைக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இந்தநிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில் மற்றும் டொன் லூசியன் உள்ளிட்ட 6 பேர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏழாவது சந்தேக நபரான சமிந்த ஜெயலால் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், பேரணியை ஏற்பாடு செய்வதற்கு பொலிஸாரிடம் முன் அனுமதி பெறத் தவறியதாக கறுவாத்தோட்டப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், ஏற்பாட்டாளர்கள் முறையான உரிமம் இல்லாமல் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.





டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam

ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri
