விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான வழக்கு
கடந்த வருடம் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டம் சட்டரீதியற்றது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று(28.01.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்ட ரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றையதினம்(28.01.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகசபை ரவீந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த முறை எதிர்த்தரப்பினராகிய வீ.ஆனந்தசங்கரி உட்பட ஏனையோர் சார்பாக தோன்றிய சட்டத்தரணி வழக்காளிகளால் கோரப்பட்ட நிவாரணங்களை வழங்குவதில் தங்களுக்கு எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று தெரிவித்திருந்தார்கள்.
இன்னுமொரு சட்டவிரோத கூட்டம்
அத்தோடு இந்த வழக்கை சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேறு ஒரு தினத்தையும் கேட்டிருந்தனர்.
சமாதனத்திற்காக கோரியிருந்தாலும் கூட, குறித்த தினத்திற்கு முன்னர் இன்னுமொரு சட்டவிரோத கூட்டத்தினை கூட்டி அதில் சில தீர்மானங்களை எடுத்ததுடன், சில உறுப்பினர்களையும் கட்சியில் சேர்த்திருந்தனர். இந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது.
ஏனெனில், நீதிமன்றத்தால் இடைக்கால கட்டளை வழங்கப்பட்டிருந்த போதும் அதனை மீறி தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிராளிகளினால் குறித்த கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
தவணையிடப்பட்ட வழக்கு
குறித்த கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் சட்டவிரோதமானது எனக் கோரி அதனையும் இரத்துச் செய்யக்கோரி நீதிமன்றத்தில் கேட்டிருந்தோம்.
நீதிமன்றமானது ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால கட்டளைக்கு எதிரான வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் செயற்பட்டமையால் குறித்த கட்சியின் பொதுச்சபை கூட்டமானது, சட்டரீதியற்றது என்று தெரிவித்துள்ளது.
அத்துடன், நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு முரணாக இவர்கள் செயற்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றது.
மீண்டும் இந்த வழக்கானது விசாரணைக்காக ஏப்ரல் 30ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
