நாமல் ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (16.02.2026) நீதிமன்றப் பணிகளில் இருந்து விலக வழக்கறிஞர்கள் முடிவு செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைகியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு
அதன்படி, வழக்கை பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ரக்பியை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri