மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபர் ஆலோசனை பெற தீர்மானம்
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு(Mahindananda Aluthgamage) எதிரான ஊழல் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைக் காரியாலயங்களுக்கு கரம் மற்றும் டாம் விளையாட்டுக்கான பலகைகளை வழங்கியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
அதற்காக அவர் அரசாங்க நிதியில் இருந்து 39 மில்லியன் ரூபாவை மோசடியாகப் பயன்படுத்தியிருந்தார்.
இது தொடர்பான விசாரணையின் பின்னர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் அப்போதைய சதொச நிறுவனத் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்திருந்தது.
குறித்த வழக்கில் சட்ட மா அதிபர் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 29ம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

கத்தோலிக்க திருச்சபையின் கடைசித் தலைவராக போப் பிரான்சிஸ்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் தீர்க்கதரிசனம் News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
