ஹிருணிகா உள்ளிட்ட 14 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான வழக்கினை அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தன்று குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் மேற்படி உத்தரவிட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே சந்தேகநபர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தை அவமானப்படுத்தும் சதித்திட்டம் எதுவுமில்லை எனவும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அத்துல ரணகல நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின், சம்பந்தப்பட்ட வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
