மன்னார் பிரதான பாலத்தடியில் கடற்கரை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு
மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் நீண்டகாலமாக இராணுவ சோதனை சாவடி அமைத்து காணப்பட்ட பகுதியில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் (21) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
நீண்ட நாட்களாக பிரதான பாலத்துக்கு அருகில் இராணுவ சோதனை சாவடி மற்றும் இராணுவ முகாம் வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டு, குறித்த காணி மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நிர்மாணப்பணி தொடர்பான விபரங்கள்
குறித்த பகுதியில் மன்னார் மக்கள் ஓய்வு நேரங்களை கழிக்கும் விதமாக கடற்கரை பூங்கா அமைப்பதற்கான நிதி முதற்கட்டமாக நகரசபையால் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட இராணுவ கட்டளையிடும் தளபதியின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
முதலில் கடற்கரை பூங்காவிற்கான திரைச்சீலை நீக்கப்பட்டதுடன் நிர்மாண பணி தொடர்பான விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மரக்கன்று நடுகையும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், நகரசபை செயலாளர்கள், நகரசபை ஊழியர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri