ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இன்று காலை பதுளை நீதிமன்றில் முன்னிலையானார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகத் தெரிவித்து ஹரீன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கினை ஜனவரி மாதம் 6ம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக நீதவான் நுஜித் டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது காவல்துறையினர் ஹரீன் பெர்னாண்டோவை கைது செய்திருந்தனர்.
பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் தேர்தல் சட்டங்களை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஹரீன் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.



