ஞானசார தேரரருக்கு எதிரான மற்றுமொரு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஞானசார தேரர் மீதான இன்னுமொரு வழக்கின் விசாரணையை எதிர்வரும ஜூலை 31ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்தொன்றை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரியை காப்பாற்ற ஹெலிகொப்டரை எடுத்துச் சென்ற மகிந்த.. சர்ச்சையை கிளப்பும் மகிந்த ஜயசிங்க
வழக்கு தாக்கல்
இஸ்லாத்தை அவமதிக்கும் அவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டதன் மூலம் இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, பிரதிவாதியான ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இன்று விடுமுறையில் இருந்ததால், இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, குறித்த வழக்கை ஜூலை 31ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய ஆட்சேபணை விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதே போன்ற பிறிதொரு வழக்கில் ஞானசார தேரருக்கு ஒன்பதுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.