சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு எதிரான வாகன விபத்து வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த பாட்டளி சம்பிக்க ரணவக்க, தனிப்பட்ட பயணம் ஒன்றிற்காக வாகனத்தைத் தானே செலுத்திச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞன் ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருந்தார்.
எனினும், அப்போது ராஜகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த சுதத் அஸ்மடல மற்றும் பாட்டளி சம்பிக ரணவக்க ஆகியோர் ஒன்றிணைந்து விபத்தின் உண்மையை மறைத்து, சம்பிக ரணவக்கவின் சாரதியான திலும் துசித குமார என்பவரே விபத்தின் போது வாகனத்தைச் செலுத்தியதாக நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
சம்பிகவின் கோரிக்கை
அதன் மூலம் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி பாட்டளி சம்பிக ரணவக்கவை சட்டரீதியான தண்டனையில் இருந்து தப்பிக்க வழி செய்த குற்றச்சாட்டில் தற்போதைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல, பாட்டளி சம்பிக ரணவக்க, திலும் துசித குமார உள்ளிட்டோருக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபர் வழக்குத் தொடுத்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பு வரும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறும் சம்பிக ரணவக்க சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்டு வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
