தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு
தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது புதிய மக்கள் முன்னணி தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளது.
இன்றையதினம்(17) புதிய மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க உள்ளிட்டோர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் குறித்த முறைப்பாட்டை அளித்துள்ளனர்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களான சிரேஷ்ட பேராசிரியர் சேன நாணயக்கார, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். டபிள்யூ. என்.யு. குணசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் பி. டி. என்.கே. பலிஹேன ஆகியோர் தங்கள் விடுமுறையை முறையாக அங்கீகரிக்காமலும், முறையாக ஓய்வு பெறாமலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு
குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக உபதிஸ்ஸ குமாரதுங்க கூறினார்.
அவர்கள் தங்கள் விடுப்பை முறையாக அங்கீகரிக்கவில்லை அல்லது தேவைக்கேற்ப பொது சேவையிலிருந்து ஓய்வு பெறவில்லை என்பதால், இலங்கை அரசியலமைப்பின் 91வது பிரிவை மீறி அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது.
இந்த சட்டவிரோதச் செயல் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்ததாக உபதிஸ்ஸ குமாரதுங்க கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



