சுகாதார வழிகாட்டுதல்களை மீறிய 1400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!
சுகாதார வழிகாட்டுதல்களை மீறிமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக 1,400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 பரவலை தொடர்ந்து சுகாதாரத் துறை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளில் பின்பற்ற வேண்டிய பல சுகாதார பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியது. கோவிட் -19 விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2020 அக்டோபர் 15ம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழின் விதிகளுக்கு இணங்க பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பராமரிப்பு குறித்து பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் கூட்டாக நடவடிக்கைகளை நடத்தியுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி கோவிட் - 19 விதிமுறைகளை பின்பற்றத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam