அடுத்த பாதீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ள சிறப்பு சலுகை
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவிக்காலத்தில் பயன்படுத்துவதற்கான வாகனங்களை வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் இன்று(07) உரையாற்றிய அவர்,
“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டு பதவிக்காலத்தின் இறுதியில் அவை திரும்பப் பெறப்படும். இதன் மூலம், அரசாங்கத்தின் பணம் மிச்சப்படுத்தப்படும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
தற்போதைய அரசாங்கத்திடம் ஒரு டிரில்லியன் ரூபாய் இருப்பு உள்ளது. இந்த இருப்பை உருவாக்க முந்தைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.
இந்த பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக, அரசாங்கம் இப்போது சந்தையைக் கட்டுப்படுத்த முடிகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு பெரிதும் பங்களிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் திருவிழா



