தேசபந்துவை பதவி நீக்கும் வாக்கெடுப்பில் இருந்து மாயமான 30 எதிர்கட்சி எம்.பிக்கள்
தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கபோவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியிருந்தபோதும், வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சுமார் 30 எதிர்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.
தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை இன்று காலை 11.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாலை 4.10 மணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் (வராத உறுப்பினர்கள் உட்பட) 177 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இராமநாதன் அர்ச்சுனா
அதன்படி, தொடர்புடைய பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு எதிராக எந்த வாக்கும் இல்லை, எனினும், இராமநாதன் அர்ச்சுனா மாத்திரம் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில் முன்னதாக பிரேரணைக்கு ஆதரவளிக்கபோவதாக இலங்கை தமிழரசுக்கட்சியும் எதிர்கட்சியும் கூறியிருந்த நிலையில் 30 எதிர்கட்சி எம்.பி.க்கள் வெளியேரியிருந்தமை தொடர்பில் சில விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.
இலங்கை பொலிஸில் நீண்டகாலமாக இருந்து வந்த தேசபந்து தென்னகோன், பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் தனது ஓய்வூதியத்தையும் இழந்துள்ளார்.
விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சுமத்தப்பட்ட மொத்த 23 குற்றச்சாட்டுகளில், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22 மற்றும் 23 ஆகிய குற்றச்சாட்டுகள் உட்பட 19 குற்றச்சாட்டுகளில் ஒருமனதாக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
குற்றச்சாட்டுகள் விசாரணை
இரண்டு குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் அவை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. தேசபந்து 2 குற்றச்சாட்டுகளில் இருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் ஒரு பொலிஸ் தலைவர் மற்றும் ஒரு சட்டமா அதிபரை மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும்.
வரலாற்றில் முதல் முறையாக இந்தச் சட்டம் நாடாளுமன்றில் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், 37வது பொலிஸ் மா அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அரசியலமைப்பு சபை இன்று (07) பிற்பகல் கூடவுள்ளது. சபாநாயகர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் கடிதத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் நேற்று (06) பெறப்பட்டது.
இதற்கிடையில், புதிய பொலிஸ் மா அதிபராக பதவியேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்த பெயர் இன்று அரசியலமைப்பு சபைக்கு அனுப்பப்படு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 19 மணி நேரம் முன்

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
