வீதி விபத்துக்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்களால் பெருமளவான உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் பலர் அங்கவீனமடைகின்ற நிலையும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையிலே இன்றையதினம்(26) மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியன இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து வீதி விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து ஏ-09 வழியாகக் கிளிநொச்சி பொதுச்சந்தை
வரை சென்று பொதுச்சந்தை வளாகத்திலும் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டன.




நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri