நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்: மாவை

Protest Vavuniya Lands Mavaisenathirajah
By Independent Writer Feb 28, 2022 09:53 AM GMT
Report

அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிலையில் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவினால் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் குறித்த அலுவலகம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினரொருவரால் மாணவருக்கு வழங்குவதற்காக துவிச்சக்கரவண்டியொன்று மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

''பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே எதிர்த்து குரல் எழுப்பியிருக்கின்றோம். அதற்கு எதிராக வாக்களித்து இருக்கின்றோம். அவ்வாறான சூழ்நிலைகள் இருந்தாலும் இப்பொழுது இயக்க ரீதியாக எங்கள் மத்தியில் இயக்கத்தை முன்னெடுத்திருக்கின்றோம்.

நாங்கள் இப்போது தீர்மானம் எடுத்திருப்பது, எங்களுடைய நிலம் நாங்கள் எங்களை ஆழ வேண்டுமாக இருந்தால் எங்கள் மண்ணிலே நில உரிமை அடிப்படையாக இருக்க வேண்டும். அது இருக்கிறதா?

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பல முனைகளில் மகாவலி, தொல்பொருளியல் அடிப்படையில் பௌத்த மயமாக்குவது, சிங்கள மயமாக்குவது, சிங்களவர்களைக் குடியேற்றுவது, அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய நிலங்கள் பறிக்கப்படுவது, அதனைவிடப் பறிக்கப்படுவதற்குச் சமமாகவும், அதற்கு அப்பாலும் இராணுவங்கள் இலட்சக்கணக்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருப்பவர்களது பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுடைய பிரதேசங்களில் கைப்பற்றப்பட்டு வந்திருக்கின்றது.

இவற்றையெல்லாம் நாங்கள் மதிப்பீடு செய்யப்போகின்றோம். நிலத்தினுடைய விடுதலைக்காக விடிவிற்காக அதனை நாங்கள் உறுதிப்படுத்துவதற்காக எங்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு எங்கள் மண்ணை நாங்கள் ஆளுவதற்கான நிலம் எங்களுக்கு இருக்க வேண்டும்.

மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். இன்று அரசினாலும் , இராணுவத்தினாலும் தொடர்ந்தும் பல காரணங்களைக் கூறி கைப்பற்றப்படுகின்ற நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றி எங்களைச் சிறுபான்மையானவர்களாக, சுயநல உரிமைக்குத் தகுதியற்றவர்களாக நாங்கள் அரசியல் உரித்தைக் கோருவதற்கு எங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்குகின்ற மிகக் கொடிய போராட்டத்திலே மிகப் பெரிய திட்டத்தோடு இன்றைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் அந்த நிலைமைக்கு அவர்கள் ஈடுபட்டு வருவதுமட்டுமல்ல அதற்கு நாங்கள் முகங்கொடுத்து பலவிதமான நெருக்கடிகளை நாங்கள் ஜனநாயக ரீதியில் நிலத்தைப் பாதுகாக்கப் போராட வேண்டி இருக்கின்றோம்.

எமது மக்களைப் பாதுகாக்கலாம் என்பதற்காக ஒரு சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற இலங்கை, சர்வதேச சூழ்நிலையில் நிலம் ரீதியாக முழுமையான விபரங்களையும், வரைபடங்களையும் மக்கள் இழந்திருக்கிறார்கள்.

மக்கள் தங்களுடைய நிலத்தை எவ்வளவு இழந்திருக்கிறார்கள், அந்த நிலங்களைப் பாதுகாக்கவும், பறிக்கப்பட்ட, அபகரிக்கப்பட்ட , இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நாங்கள் மீட்டெடுப்பதற்காகவும் விரைவில் தமிழரசுக்கட்சியின் மாநாடு நடத்தப்பட இருக்கின்றது. அடுத்த வாரத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கூகுள் மெப் அடிப்படையில் எவ்வளவு நில வரைபடங்களைக் கொண்டுள்ளது. அதற்குப் பின்னர் எவ்வளவு நிலங்களை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

இராணுவம் எவ்வளவு நிலங்களைக் கைப்பற்றியிருக்கின்றது, அவ் நிலங்களில் தாங்கள் குடியுரிமை கொண்டுள்ளவர்களாக, உரித்துடையவர்களாக , அங்கே பண்ணைகளை வைத்திருப்பதும், விவசாயத்தைச் செய்வதும் , தொழில்பேட்டைகளை அமைப்பதும் இவ்வாறு வடக்கு கிழக்கு முழுவதும் சிங்களவர்களைக் குடியேற்றுவது மட்டுமல்ல இராணுவமே குடியேற்றப்பட்டவர்களாக எங்களுடைய நிலங்களைக் கைப்பற்றிப் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்களுடைய கையிலே வைத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் சர்வதேசத்திற்கு முன்னால் முன்வைப்பது மட்டுமல்ல ஜனநாயக ரீதியாக இந்த நாட்டுக்குள்ளும், வெளியிலும் புலம்பெயர்ந்தவர்களும் நிலத்தை மீட்பதற்காகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மாநாட்டிலே உரிய தீர்மானத்தை எடுக்க இருக்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US