தலைவர் பதவிக்காக மக்களை கூறுபோடும் செயற்பாடு: த.கலையரசன்

Easternprovince Tamilnationalliance Tamilpeople Thavarasakalaiyarasan
By Kumar Jan 28, 2022 07:18 PM GMT
Report

ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் அதற்கெதிரான பிரச்சாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கைச்சாத்திடப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலான பல விடயங்கள் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்தமட்டில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிலையான தீர்வினை நோக்கிய பயணத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டில் சமத்துவமான சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்தி வருகின்றோம்.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பிற்பாடு இந்த 13வது திருத்தச் சட்டம் கைச்சாத்திடப்பட்டது. அந்த வேளையில் வடக்கு கிழக்கு இணைந்ததான மாகாணசபை இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த மாகாணசபை நீண்ட காலம் இயங்க முடியாமல் கலைக்கப்பட்ட வரலாறும் உண்டு.

அதன் பின் இணைந்த வடக்கு கிழக்கு 2008ம் ஆண்டு வடக்கு வேறு கிழக்கு வேறாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் முழு மனதுடன் செயற்படவில்லை என்பதைத்தான் இந்த நாட்டில் இருக்கும் அரசியல் சூழல் இன்றுவரைக்கும் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழ விரும்புகின்றோம். ஏனைய சமூகங்களைப் போன்று சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்று வரைக்கும் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அண்மைக்கால செயற்பாடுகள் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதனையே காட்டி நிற்கின்றது.

இன்று நேற்றல்ல நீண்டகாலமாக எமக்குள் இருக்கின்ற பிரச்சனை ஒற்றுமையின்மையே. இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு எமது மக்களுக்கான தீர்வினைப் பெறமுடியாது.

இந்திய வல்லரசினூடாக ஏற்படுத்தப்பட்ட இந்த அதிகாரத்தை வைத்தே நாங்கள் எங்களுடைய தீர்வை நோக்கிய பயணத்தை முன் நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்.

இணைந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு இன்று கிழக்கு மாகாணம் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. எங்களுடைய அதிகாரங்கள் இழக்கச் செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தின் எமது இனப்பரம்பல் குறைக்கப்படுகின்ற ஒரு சூழலில் எங்களுடைய இனத்தின் ஒற்றுமையையும் இருப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்களுக்கும் இருக்கின்றது.

ஆனால் இன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டம் என்கின்ற விடயத்திலே தேசியத்தோடு பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எமது தலைவர்கள் ஒரு உறுதியான நிலையான கட்டமைப்போடு இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்த 13வது திருத்தச் சட்டம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றவர்கள் அல்ல.

இந்த 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்ட போது அதிகாரங்கள் இல்லை என்கின்ற விடயத்தை வலியுறுத்தியவர்கள் எமது தலைவர்களே, இதனை ஏற்றக் கொள்ள வேண்டும். ஆனாலும் இதனை முழுமையாக இல்லாமல் செய்து விட்டு எமது தீர்வு தொடர்பிலான எமது எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது.

எனவே இதனை அடிப்படையில் வைத்துக் கொண்டு எமக்கான அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் சமஷ்டியை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றோம். இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இதனை விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கக் கூடாது என்பதில் இந்த அரசாங்கம் மும்முரமாக கடும் தீவிரவாதப் போக்கோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அண்மைக் காலங்களில் எங்களின் அதிகமான தொன்மையான இடங்கள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நாங்கள் எமது சமூகத்தின் இருப்பு, ஒற்றுமை என்ற விடயத்திலிருந்து மாற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம். அதுமாத்திரமல்லாமல் இந்த நாட்டின் தலைவர் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு தமிழர் தரப்புடன் பல பேச்சுக்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் இற்றைவரைக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே இவ்வாறான விடயங்களையெல்லாம் நாங்கள் கருத்திற் கொண்டு எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு தொடர்பிலும் நாங்கள் முன்னின்று உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

குறிப்பாகக் கிழக்கு மாகாணம் மிகவும் மோசமாகப் பொருளாதார ரீதியாக ஏனைய சமூகங்களின் ஆக்கிரமிப்புக்குள் உட்பட்ட பிரதேசமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒற்றுமை என்று பேசி அரசியல் ரீதியாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனை எமது மக்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக, இனத்திற்காக, எமது இருப்புக்காகப் போராடுகின்ற கட்சி எது, அதனை எவ்வாறு நாங்கள் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விடயங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் அந்த விடயத்தில் எமது மக்கள் உறுதியாக இருந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US