யாழில் தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த அவலம்!
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏழாலை, மத்தி பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தனது வேலைத்தளத்தில் வேலை செய்துகொண்டு இருந்தவேளை திடீரென அவரது நெஞ்சில் தச்சு பட்டறையின் வாள் வெட்டி படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
