கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பிடித்து எரியும் சரக்கு கப்பல்
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
X-PRESS PEARL என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார சபை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் குஜராத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசித்திருந்த நிலையிலேயே இந்த கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இரசாயன திரவியங்கள் அடங்கிய ஆயிரத்து 486 கொள்கலன்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், ரஸ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 25 பேர் கொண்ட பணிக்குழாமினர் அந்த கப்பலில் இருந்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.


தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan