பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு - பெண் உள்ளிட்ட குழுவினர் கைது
பிரித்தானியாவில் தாதியர் சேவைத் துறையில் வேலை வழங்குவதாகக் கூறி கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேர்காணல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஒக்டோபர் 19ஆம் திகதி இவர்களை கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பிரித்தானியாவில் தாதியர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு இவ்வாறான நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, உடனடியாக செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
மாரா வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது, 3 லட்சம் ரூபாய் பணம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் இரண்டு ரசீது புத்தகங்களும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
சரீரப் பிணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
