புனித அந்தோணியாரிடம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜெபத்தின் மூலம் விண்ணப்பம்
ஈஸ்டர் தாக்குதல் மூலம் அரசியல் இலாபம் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அனைவருக்கும் தேவனின் சட்டத்திற்கு அமைய நீதியை நிறைவேற்ற தலையிடுமாறு, கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, புனித அந்தோணியாரிடம் ஜெபத்தின் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.
உங்களது இந்த பரிசுத்த தேவாலயத்திலும், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் உட்பட மேலும் சில இடங்களில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கொலை செய்யப்பட்ட அனைவரையும் உங்களது கரங்களில் ஒப்படைக்கின்றேன்.
அந்த அனர்தத்தில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், தமது அன்புக்குரியவ்கனை இழந்து துன்புறும் மக்களின் வேதனை போக்க உதவுங்கள்.
சுயநலமிக்க அடிப்படைவாதத்திற்கு அடிப்பணித்து அப்பாவிகளின் இரத்தத்தை புனித பூமிக்குள் சிந்த வைத்து, அனர்த்தத்தை ஏற்படுத்தியவர்கள், அதற்கு துணை புரிந்தவர்கள், தற்போது தாம் சுத்தவாளிகள் எனக் கூறிக்கொள்வோர், தமது கடமையை நிறைவேற்றாது அரசியல் இலாபம் பெற்றோர், அறிந்து தடுக்க தவறிய அரசியல்வாதிகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க தேவனிடம் எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
இந்த அப்பாவிகளின் இரத்தத்தின் மூலம் அரசியல் இலாபம் பெற்றுக் கொண்ட, அப்பாவிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பிலிருந்து தவறியவர்களுக்கு தேவனின் சட்டத்திற்குள் நீதியை நிலைநாட்டுங்கள். உங்களது புனித பூமியில் இரத்தம் சிந்திய பக்தர்கள் நீதியை கோரி சுவர்கத்திடம் வேண்டுகின்றனர்.
மனிதர்கள் மூலம் நீதியைபெற்றுக்கொள்ள முடியாத அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக புனித அந்தோணியாரே நீங்கள் தேவனின் முன்னால் எமக்காக தலையீடுகளை செய்யுங்கள் - ஆமென் என பேராயர் ஜெபம் செய்துள்ளார்.
மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொட்டாஞ்சேனை புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற திருப்பலி பூஜையில் புனித அந்தோணியாரிடம் இந்த வேண்டுதலை செய்துள்ளார் என தெரியவருகிறது.