கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் கர்தினால்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjith) கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து கத்தோலிக்க உறுப்பினர்களுக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கர்தினால் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri