உயிர்த்த ஞாயிறு தக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை மன்னிக்க தயார்: பேராயர் கர்தினால் மல்கம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதேபோன்று தென்னாப்பிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைத் தொடர்ந்து இனக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வந்து தங்களின் தவறுகளுக்காக வருந்தினர்.

நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்
அப்போதைய தென்னாபிரிக்க ஜனாதிபதி. நெல்சன் மண்டேலா அவர்கள் மனந்திருந்திய பிறகு தவறு செய்த அனைவரையும் மன்னித்தார். அதுபோன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களையும் மன்னிக்க தயார்.
இதன்படி உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் தாங்கள் வகிக்கும் பதவியை விட்டு விலகி,நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.
நேர்மை என்பது அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாது. எனவே அவர்கள் உண்மையைத் தழுவ பயப்பட வேண்டாம் என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri