இலங்கையில் ஜனநாயகத்திற்கு பேராபத்து: இத்தாலியில் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றஞ்சாட்டு - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்தை விளைவிக்கக் கூடியவை எனவும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வத்திக்கானில் நடைபெற்ற Ad Limina Apostolorum என்னும் திருத்தந்தையுடனான ஆயர்கள் சந்திப்பை முன்னிட்டு உரோமிற்கு வருகை தந்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




