கடற்றொழிலாளர்களிடம் கொழும்பு பேராயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
பேருவலை, பண்டாரவத்தையில் அமைந்துள்ள புனித லாசரஸ் தேவாலயத்தில் இன்று(06.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
போதைப்பொருள் கடத்தலுக்குத் தங்களது மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிற்குள் நுழையும் கணிசமான அளவிலான போதைப்பொருட்கள் கடல் வழியாக, மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தியே கொண்டு வரப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் பழக்கம் நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையை முற்றிலும் சீரழிப்பதுடன், அவர்களின் குடும்பங்களுக்கும் மீள முடியாத கடுமையான பாதிப்புகளையும் துயரங்களையும் ஏற்படுத்தி வருவதாக அவர் கவலையுடன் எச்சரித்துள்ளார்.
தங்களது படகுகள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு மீனவ சமூகம் எவ்விதத்திலும் துணைபோகவோ வசதி செய்து கொடுக்கவோ வேண்டாம் என தாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening