வாழ்வாதாரத்துக்காக அட்டை பண்ணை செயல்படுத்தப்படும்! தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களுடன் பேச முடியாது:அமைச்சர் டக்ளஸ்
வடக்கு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அட்டைப் பண்ணைகள் செயல்படுத்தப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் அமைந்துள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று(28.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அட்டைப் பண்ணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,“வடக்கு மாகாணத்தில் அட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான கோரிக்கைகள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.
அட்டைப் பண்ணைகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பண்ணை அமைப்பதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை சரி செய்து முன்னோக்கி செல்வதற்கு தயாராக இருக்கின்றானே தவிர நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிக்க மாட்டேன்.
ஆனால் சிலர் அட்டப்பண்ணைகளை வேண்டாம் என பிரச்சாரம் செய்கிறார்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய தேவை இல்லை.
ஏனெனில் உண்மையாக தூங்குபவரை எழுப்பி விடலாம் தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது அதேபோன்று தான் சரியென தெரிந்தும் பிழையென கூறுபவர்கள் தொடர்பில் நான் கணக்கெடுக்க போவதில்லை.
அட்டை பண்ணை தொடர்பில் எதிர் கருத்து கூறுபவர்களில் ஒருவர் ஏற்கனவே மீனவ சங்கத்தில் சுமார் 45 இலட்சம் ரூபாக்களுக்கு மேலான தொகையை சங்கத்துக்கு கணக்கு காட்டாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரதேச அபிவிருத்தி குழு
மீனவ சங்கத்தின் கணக்கில் குறித்த தொகை இன்னும் நிலுவையில் இருக்கின்ற நிலையில் அது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது அண்மையில் இரண்டு சில்லு சைக்கிள்காரர்கள் அட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள்.
ஆனால் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அட்டை பண்ணையால் பாதிப்பு ஏதும் ஏற்படுகிறதா என கேள்வி எழுப்பிய போது அவர்களிடமே கேட்க வேண்டும் என தலையைச் சொறியும் வீடியோக்கள் வெளிவந்தமை யாவரும் அறிந்ததே .
ஆகவே பிழைகள் இருந்தால் அதை சரி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் அரசியல்
நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு நான்
இடம் கொடுக்கமாட்டேன்.”என தெரிவித்துள்ளார்.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
